இந்திய தர நிர்ணய அமைப்பின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கொண்டாட்டம்

திருப்போரூர்: இந்திய தர நிர்ணய அமைப்பின் சார்பில், சென்னை அருகே மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்திய தர நிர்ணய அமைப்பின் சென்னை மண்டல மூத்த இயக்குநர் பவானி தலைமை தாங்கினார். இந்திய தர நிர்ணய அமைப்பின் தென் பிராந்திய ஆய்வக விஞ்ஞானி மீனாட்சி கணேசன் கலந்துக்கொண்டு, நுகர்வோர் பாதுகாப்பில் இந்திய தர நிர்ணய அமைப்பின் பங்கு, பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்தல் ஆகியவை குறித்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியின்போது கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிதல், வாகன கண்ணாடி மற்றும் டயர்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பரிசுகளை வழங்கி, குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். நிகழ்ச்சியில் முன்னணி தொழில் நிறுவனங்களின் சார்பில் தொழில்துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post இந்திய தர நிர்ணய அமைப்பின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: