மாமல்லபுரம், மார்ச் 13: மாமல்லபுரம் பகுதியில் நேற்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கன மழை பெய்து, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்தது. சுட்டெரிக்கும் வெயிலால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக விட்டு, விட்டு கனமழை பெய்தது. இதனால், கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, தென் மாட வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளை சூழ்ந்து பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post மாமல்லபுரத்தில் திடீர் மழை appeared first on Dinakaran.