தமிழ்நாடு பாரா கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

திருப்போரூர்: மேலக்கோட்டையூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16ம்தேதி தமிழ்நாடு பாரா கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் முகாம் வரும் 16ம்தேதி காலை 8.30 மணிக்கு, சென்னை அருகே மேலக்கோட்டையூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த, முகாமில் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். முகாமில், பதிவு செய்பவர்களின் விளையாட்டு தகுதி, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பாரா கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆகவே, ஆர்வமுடைய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு பாரா கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: