சீவாடி அடுத்த புன்னமை நெடுஞ்சாலையோரத்தில் விபத்து அபாய கிணற்றை மூட வேண்டும்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இலத்தூர் ஒன்றியத்தில் சீவாடி கிராமம் உள்ளது. இப்பகுதியில் இருந்து வடக்கு வாயலூர் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் கல்வி, வேலை, வியாபாரம் என பல்வேறு தேவைகளுக்காக வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் சீவாடி அடுத்த புன்னமை கிராமம் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள திறந்தநிலை கிணற்றால் விபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் உள்ளது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் சூழலில் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ஒருகாலத்தில் எங்கள் கிராமத்திற்கான குடிநீர் ஆதாரமாக விளங்கிய கிணறு தற்போது தூர்ந்துபோய் பாழடைந்த நிலையில் உள்ளது. சாலையோரம் அமைந்துள்ள கிணற்றைச் சுற்றிலும் தடுப்புகள் இல்லாததால் கவனக்குறைவாக வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயகரமான சூழல் உள்ளது. பாழடைந்த நிலையில் உள்ள கிணற்றை மூட வேண்டும், என்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், கிணற்றை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே, பழடைந்து, வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள கிணற்றில் மண்ணைக் கொட்டி மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுக்கின்றனர்.

The post சீவாடி அடுத்த புன்னமை நெடுஞ்சாலையோரத்தில் விபத்து அபாய கிணற்றை மூட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: