அம்பேத்கர் விவகாரம் உண்மையை காங். திரித்து கூறுகிறது: அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் இதற்கு முன்பு, குழப்பத்தை ஏற்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்தவும் பிரதமர் மோடி மற்றும் எனது கருத்துக்களை தவறாக சித்தரித்துள்ளது. உண்மைகளை திரிப்பதற்காக காங்கிரசை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் அம்பேத்கருக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது, இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்பதை உண்மைகளுடன் எடுத்துரைத்தோம். காங்கிரஸ் கட்சி, சாவர்க்கரை அவமதித்தது, எமர்ஜென்சியை கொண்டு வந்து அரசியலமைப்பை சிதைத்தது.

இந்த உண்மைகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் தனது பழைய தந்திரத்தை பயன்படுத்தி திரிக்கப்பட்ட உண்மைகளை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அம்பேத்கரை ஒருபோதும் அவமதிக்காத கட்சியில் இருந்து வந்தவன் நான். நான் பதவி விலகுவது காங்கிரஸ் தலைவருக்கு மகிழ்ச்சி தரும் என்றால் அதை செய்கிறேன். ஆனால் அதன் மூலம் அவரது பிரச்னை ஒருபோதும் தீராது. அவர் இன்னும் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையிலேயே தான் இருக்க வேண்டும். ராகுல் காந்தியின் அழுத்தத்தின் காரணமாக கார்கே எனது கருத்துக்களை திரித்து எனக்கு எதிராக பிரசாரம் செய்கிறார் என்றார்.

The post அம்பேத்கர் விவகாரம் உண்மையை காங். திரித்து கூறுகிறது: அமித்ஷா விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: