மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றாவாளிகள் அனைவருக்கும் பிடிவாரண்ட்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் நிலப் பிரச்னை தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், இன்ஜினீயரான போரிஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்த 9 பேரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இது தொடர்பான மேல்முறையீடு மனு நேற்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதிகள், \”மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்ட அனைவருக்கும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின் போது குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

The post மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றாவாளிகள் அனைவருக்கும் பிடிவாரண்ட்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: