சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்றும் அதிகாலை முதலே சன்னிதானத்தில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை சரங்குத்தியையும் தாண்டி மரக்கூட்டம் வரை காணப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு வரிசையில் நின்ற பக்தர்களால் 8 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால் நேற்று மரக்கூட்டத்தில் இருந்து சிறிய சிறிய குழுக்களாக போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: