புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உயர் பென்ஷன் பெறும் திட்டத்தை இபிஎப்ஓ கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 17.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் பல கட்டமாக கடந்த மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், தற்போது 3.1 லட்சம் விண்ணப்பங்கள் பதிவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இபிஎப்ஓவால் ஆய்வு செய்யப்பட்டு கூடுதல் தகவல் கோரியது உட்பட மொத்தம் 4.66 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை நிறுவனங்கள் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
The post உயர் பென்ஷன் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்ற இறுதி அவகாசம் நீட்டிப்பு: இபிஎப்ஓ அறிவிப்பு appeared first on Dinakaran.