கேப் கனாவெரல்: இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும், பாரி வில்மோரும் கடந்த ஜூன் 5ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் சோதனை விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். நாசாவும், போயிங் நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த விண்கலம் முதல் முறையாக மனிதர்களுடன் விண்வெளி பயணத்தை மேற்கொண்டது. ஜூன் 15ம் தேதி சுனிதா இதே விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் விண்வெளி மையத்திலேயே கடந்த 7 மாதங்களாக தங்கி உள்ளனர். இவர்கள் 2025 பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா கூறியிருந்தது. இந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸின் புதிய விண்கலம் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மார்ச் இறுதி வரையிலும் சுனிதா வில்லியம்ஸ் திரும்ப வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது. அவர் ஏப்ரல் மாதத்தில் அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விண்வெளி நிலையத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் appeared first on Dinakaran.