கடற்படை படகு மோதியதில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து 13 பேர் பலி: மும்பை கடலில் பயங்கரம்; 101 பேர் மீட்பு

மும்பை: மும்பை அருகே கடற்படை படகு மோதி சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து. இதில் கடற்படையை சேர்ந்த 2 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 101 பேர் மீட்கப்பட்டனர். பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்றான எலிபண்டா தீவுக்கு மும்பையில் இருந்து படகு சவாரி உள்ளது. மும்பை வரும் சுற்றுலா பயணிகள், படகு மூலம் தீவுக்கு சென்று அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க எலிபண்டா குகையை பார்வையிட செல்கின்றனர். நேற்று படகில் சுற்றுலாப் பயணிகள் மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து எலிபண்டா குகைக்கு சென்று சென்றனர்.

அந்த படகில் 110க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது கடலில் வேகமாக வந்த கடற்படை படகு சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு மீது மோதியது. இதில் பயணிகள் படகு கவிழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய கடற்படை படகில் இருந்த கடற்படையினரும் கடலில் மூழ்கினர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், போலீசார், ஜவஹர்லால் துறைமுக அதிகாரிகள், மீனவர்கள் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில் 4 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டன. 101 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடற்படையை சேர்ந்த 2 பேர் உட்பட 13 பேர் இறந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

The post கடற்படை படகு மோதியதில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து 13 பேர் பலி: மும்பை கடலில் பயங்கரம்; 101 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: