2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மோடி 3ம் முறையாக பதவியேற்ற பிறகு பல்வேறு வௌிநாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக மோடி தற்போது குவைத் நாட்டுக்கு இரண்டுநாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “குவைத் எமிர் ஷேக் மெஷல் அல் – அஹ்மத் அல் – ஜாபர் அல் சபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் செல்கிறார். இந்த பயணத்தின்போது குவைத் தலைமை அதிகாரிகள், இந்திய சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடுவார்” என்று தெரிவித்துள்ளது. இதற்குமுன் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981ம் ஆண்டு குவைத் நாட்டுக்கு சென்றார். அதன்பிறகு தற்போதுதான் இந்திய பிரதமர் மோடி குவைத் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: