கதுவா: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்று நள்ளிரவு தீப்பற்றி எரிவதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து சிலர் அங்கு விரைந்தனர்.தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டிற்குள் புகை நிரம்பியிருந்ததால் மயக்கமடைந்த நிலையில் இருந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு முன்னாள் டிஎஸ்பி அவதார் கிரிஷன்(81)அவரது மகள், மகன் இரண்டு சிறுவர்கள் என ஆறு பேரும் உயிரிழந்துள்ளனர். மனைவி, உட்பட 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post வீட்டில் தீப்பற்றியதால் முன்னாள் டிஎஸ்பி உட்பட 6 பேர் மூச்சுத் திணறி பலி appeared first on Dinakaran.