டெல்லி: இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனையில் சுமூக தீர்வு எட்டப்படுவதையே இலங்கை விரும்புகிறது என பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார உதவிக்கு நன்றி. இந்திய வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு சிறப்பான இடமுண்டு. Bottom Trawling முறையை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றது; இரு நாடுகளுக்கும் சமூக தீர்வு ஏற்படும் வகையில் மீனவர் பிரச்னையில் தீர்வு காண வேண்டும். மீன்பிடித் தொழிலை பாதிக்கும் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு விரோதமான செயல்பாடுகள் இலங்கையில் நடைபெற ஒருபோதும் இலங்கை அரசு அனுமதிக்காது என்றும் கூறினார்.
The post மீனவர் பிரச்னையில் சுமூக தீர்வு: இலங்கை அதிபர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.