அந்த கடிதத்தில், ‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் கடந்த 1971ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேரு பிரபலங்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த கடிதங்கள் கடந்த 2008ம் ஆண்டு 51 ெபட்டிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மேற்கண்ட கடிதங்களின் அசல் பக்கங்கள், புகைப்படங்கள், டிஜிட்டல் பிரதிகளை மீண்டும் அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்க வேண்டும். முன்னதாக கடந்த செப்டம்பரில், நேரு எழுதிய கடிதத்தைத் திருப்பித் தருமாறு சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கடிதங்களில் முன்னாள் பிரதமர் நேரு, முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எழுதிய கடிதங்கள் அடங்கும். அவற்றில் எட்வினா மவுண்ட்பேட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜெயப்பிரகாஷ் நாராயண், பத்மஜா நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், அருணா ஆசிஃப், பாபு ஜக்ஜீவன் ராம், கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோரின் கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த கடிதங்கள் நேரு குடும்பத்துடன் தனிப்பட்ட முக்கியத்துவம் கொண்டதாக இருந்தாலும், வரலாற்றுத் தகவல்களை சேகரித்து வைப்பது வரலாற்று அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிய அளவில் உதவும் என்று நம்புகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மேற்கண்ட கடிதங்கள் சோனியா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
The post எட்வினா மவுண்ட்பேட்டன் உட்பட பலருக்கு நேரு எழுதிய கடிதத்தை திருப்பி கொடுங்கள்: சோனியா, ராகுலுக்கு ஒன்றிய அரசு கடிதம் appeared first on Dinakaran.