சபரிமலை ஐயப்பன் கோயிலில் 29 நாட்களில் 22.67 லட்சம் பேர் தரிசனம்.. ரூ.163.89 கோடி வருவாய்!!

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 29 நாட்களில் 22.67 லட்சம் பக்தர்கள் வந்துள்ள நிலையில், ரூ.163.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் துவங்கிய நிலையில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தேவஸ்தான அதிகாரிகளின்கூறுகையில்; சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 29 நாட்களில் 22 லட்சத்து 67 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ள நிலையில், ரூ.163.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சபரிமலை மண்டல மகர விளக்கு நவம்பர் 14ம் அன்று தொடங்கி 29 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 22,67, 956 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட நான்கரை லட்சம் பக்தர்கள் அதிகம் வந்துள்ளனர். அதேபோல கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற வருவாயை விட இந்த ஆண்டு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மண்டல கால பூஜை முடிவடைவதற்குள் மேலும் 15 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் 29 நாட்களில் 22.67 லட்சம் பேர் தரிசனம்.. ரூ.163.89 கோடி வருவாய்!! appeared first on Dinakaran.

Related Stories: