மீனவர் விவகாரம் – ஒன்றிய அமைச்சர் பதில்

டெல்லி: இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளளனர் என காங்கிரஸ் எம்.பி. சுதா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்களின் 198 படகுகளையும் இலங்கை அரசு சிறைப்பிடித்து முடக்கி வைத்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட 141 மீனவர்களில் 96 பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ளனர். வங்கதேச சிறையில் 95 இந்திய மீனவர்கள், 6 படகுகள், பாகிஸ்தானில் 211 பேரும், 1172 படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. 2024 ஜூலை 1 அன்று இந்திய-பாகிஸ்தான் இருநாட்டு தகவல் பரிமாற்றத்தின்படி பாகிஸ்தான் சிறையில் 211 பேர் உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் மீனவர்களை அவரவர் நாட்டுக்கு ஒப்படைப்பது பற்றி 2008 மே 21ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜன.1 மற்றும் ஜூலை 1 அன்று இருநாட்டு மீனவர்கள் மற்றும் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் ஏற்கனவே உள்ளது. பஹ்ரைன் சிறையில் 37 இந்திய மீனவர்களும், சவுதி சிறையில் 25 மீனவர்களும், கத்தாரில் 4 மீனவர்களும் உள்ளனர்.

The post மீனவர் விவகாரம் – ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: