சீனா மட்டுமின்றி ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆச்சரியம்; எதிரிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் ‘மொபைல்’ ஏவுகணை: டி.ஆர்.டி.ஓ வரலாற்றில் புதிய மைல்கல்

புதுடெல்லி: சீனா மட்டுமின்றி ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆச்சரியப்படும் வகையில் எதிரிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் ‘மொபைல்’ ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ உருவாக்கி வருகிறது. இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), ராணுவத்திற்கான ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. இப்போது எதிரிகளை வீழ்த்தும் ஆபத்தான ஆயுதத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஆயுதம் எதிரிகளுக்கு நேரடியாக மரண பயத்தை ஏற்படுத்தும். சீனா மட்டுமின்றி இந்தியாவின் நண்பர்களான ரஷ்யாவும் அமெரிக்காவும் டிஆர்டிஓவின் இந்த ஆயுதத்தால் ஆச்சரிமடைந்துள்ன. ரஷ்யாவின் ‘புக்’ ஏவுகணையை போன்றே டிஆர்டிஓ ‘மொபைல்’ ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இந்த ஏவுகணையானது பாதுகாப்புத் துறையில் வரலாற்று சாதனையாகும். மேலும் ஆயுத தயாரிப்பில் முன்னணி நாடுகள் மட்டுமின்றி உலகளவிலின அதிகார சமநிலையையும் பாதிக்கும். இந்த நடமாடும் (மொபைல்) ஏவுகணையானது வான்வழியில் எதிரியின் ஏவுகணை பறந்து வரும்போதே வான்வழியிலேயே அழித்துவிடும். உயர்தர ரேடார் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதிரியின் ஏவுகணையை மிகவும் துல்லியமாக குறிவைத்து தாக்கும். இந்த ஏவுகணையை ராணுவ டாங்கியின் மீது பொருத்தி தாக்குதல் நடத்தலாம்.

இது மட்டுமல்லாமல், இந்த ஏவுகணையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதும் எளிதாக இருக்கும். சில மணி நேரங்களுக்குள் அதன் இருப்பிடத்தை மாற்ற முடியும். இந்த ஏவுகணையானது 70 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்து, எதிரி ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிக்கும் என்று டி.ஆர்.டி.ஓ-வின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post சீனா மட்டுமின்றி ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆச்சரியம்; எதிரிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் ‘மொபைல்’ ஏவுகணை: டி.ஆர்.டி.ஓ வரலாற்றில் புதிய மைல்கல் appeared first on Dinakaran.

Related Stories: