டிச. 13, 14, 15ம் தேதி விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே மெமு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் ரயில் 12ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.15 மணி அளவில் விழுப்புரம் ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரயில் 13ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் ஜங்சனுக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.
அதேபோல் மற்றொரு ரயில் விழுப்புரம் ஜங்ஷனிலிருந்து 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலையை சென்றடையும். பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த நேர அடிப்படையில் 15ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து 13ம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதியம் 1.25 மணிக்கு வந்தடையும். பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதனை தொடர்ந்து அந்த ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 க்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு 14ம் தேதி அதிகாலை 7.20 மணிக்கு திருச்சியை சென்று சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கார்த்திகை தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! appeared first on Dinakaran.