காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.தங்கபாலுவுக்கு, செல்வப்பெருந்தகை வாழ்த்து!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு தமிழ்நாடு அரசு காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இந்நாள் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “ஒன்றிய முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமானகே.வீ.தங்கபாலு அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்ச்சியடைந்தேன். இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.கே.வீ.தங்கபாலு பெருந்தலைவர் காமராஜர் விருது பெறுவதற்கு மிகவும் தகுதியானவர்; பொருத்தமானவர். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுக்கு தேர்வு செய்த தேர்வுக்குழுவிற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ல் சென்னையில் நடைபெறும் விழாவில் கே.வி.தங்கபாலுவுக்கு முதலமைச்சர் விருது வழங்குகிறார். விருதுத்தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.தங்கபாலுவுக்கு, செல்வப்பெருந்தகை வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: