மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை: போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஜெ.ஜெ.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தையடுத்து, ஜெ.ஜெ.நகர் போலீசார் துக்ளக்கை டிசம்பர் 4ம் தேதி கைது செய்தனர். துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; அலிகான் துக்ளக்கிடம் எந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யவில்லை; மற்ற குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யபப்ட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து துக்ளக் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜே. ஜே நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

The post மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: