சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசிக்க பாதுகாப்பு கோரி எஸ்.பி. மற்றும் சார் ஆட்சியருக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கடிதம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் 12-ம் தேதியும், தரிசனம் 13-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு ஆணை பிறபித்ததன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய 4 நாட்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்ததன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டி விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில் ஆறுகால பூஜையை தவிர்த்து மற்ற நேரங்களில் கனசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தீட்சிதர்கள் தரப்பில் விளக்கமளிக்கபப்ட்டது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு முடிக்கபட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 12-ம் தேதியும், தரிசனம் 13-ம் தேதியும் நடைபெற்றவுள்ளது.

இந்த விழாவின் போது பக்த்தர்கள் பாதுகாப்பாக கனசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் எஸ்.பி. மற்றும் சார் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசிக்க பாதுகாப்பு கோரி எஸ்.பி. மற்றும் சார் ஆட்சியருக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: