இன்று உலக பால் தினம்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் திறனுடையது: ஹார்மோன் சரியாக சுரக்க உதவுகிறது

ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் 2001 ஜூன் மாதம் 1ம் தேதி உலக பால் தினமாக அனுசரிக்கப் படுகிறது. சர்வதேச உணவு பொ ருளாக பால் இருப்பதற்கான முக்கியத்தை இந்த தினம் அங்கீகரிக்கிறது. பாலின் மீது கவனம் செலுத்துவதற்கும் ஆரோக்கியமான உணவுகள், தன்னி றைவான உணவு உற்பத்தி, வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தை ஆதரிப்பதில் பாலின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக பால் தினம் ஒரு வாய்ப்பை அளிக்கின்றது. இதுகுறித்து, நீடா வேளாண் அறிவியல் நிலையம் உணவியல் மற்றும் சக்தி கள் துறையின் இணைப் பேராசிரியை கமலசுந்தரி கூறியது: பழங்காலம் தொட்டே நாம் பாலை, வெறும் பாலாக மட்டும் பயன்படுத்தாமல் வீட்டிலே யே தயிர் ,மோர், வெண்ணை, நெய் என்று பாலை பல வகைகளில் பயன் படுத்துகிறோம்.

பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியதாக இருப்பதால் ஆரோக்கிய மாக நாம் வாழ்வதற்கு பால் அவசியம் தேவைப்படுகிறது. நாட்டில் பால் உற் பத்தி பெருகி இன்று உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இட த்தில் உள்ளது. உலகில் சிறந்த பால்பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் வரிசை யில் இந்தியா உள்ளது. இந்திய மருத்துவக் ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைப்படி, ஒரு நபர் குறை ந்தது 300 மிலி பால் தினமும் பருக வேண்டும் . ஆனால் 146- 185 மிலி மட்டு மே மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒருவர் 200 மிலி பால் உட்கொண் டால் அவருக்கு அன்றாடத் தேவையான 12 சதவீத புரதம் உள்ளது, 41 சதவீத சுண்ணாம்புச்சத்து, 50 சதவீத வைட்டமின் பி12 பெற்றுவிடலாம். மேலும் இதில் தரமான புரதம் உள்ளது. ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் பாலில் உள்ளதால் அது மன அமைதியைத் தரக் கூடிய ஹார் மோன் சுரக்க உதவுகிறது.

பாலில் மதிப்பு கூட்டுதல்: பாலை கரந்து ஆறு மணி நேரத்திற்குள் விற்பனை செய்ய முடிந்தால் நேரடியாக விற்பனை செய்யலாம். 6 மணி நேரத்திற்கு மேல் ஆனால் பாலில் உள்ள நுண்ணுயிர்கள் பெருகி பாலை கெடுத்து விடுகின்றது. ஆகையால் பாலை 24 மணி நேரம் கெடாமல் இருக்க குளிர் சாதன முறையில் பாது காக்கலாம். வணிக ரீதியாக உள்ள பால் பொருட்கள்: சுவையூட்டிய பால், கோவா, இனி ப்பு கோவா , இனிப்பு தயிர், மசாலா மோர், ஸ்ரிகந்த், லஸ்ஸி, பன்னீர், பாலா டைக் கட்டி, ஐஸ்கிரீம், குல்பி, பால் ஏடு, வெண்ணெய், நெய், இனிப்பு வகை யான குலோப்ஜாமுன், பால் அல்வா, பால்கோவா, பால்பாயசம், ரசகுல்லா, என பெரிய பட்டியலே உள்ளது. இவை அனைத்து தயாரிப்புகளும் பெரிய இயந்திரங்கள் இன்றி சிறிய இயந்திரங்களைக் கொண்டு எந்த அளவிலும் செய்ய சாத்தியமானது .

தயிர், இனிப்பு தயிர் லஸ்ஸி போன்ற பொருட்களை சுவை மாறாமல், தரம் மாறாமல் இருக்க இதனை நொதிக்கும் நுண்கிருமி ஆன லாக்டோ பேசில் லஸ் நுண்ணுயிர்களை வணிக ரீதியாகவே விற்கிறார்கள். இதனை பயன் படுத்தி சிறு குறு விவசாயிகள் வணிக ரீதியாக பால் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடலாம்.
மேலும், பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உண்பதால் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்புகள் கூறுகிறது . குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி ‌நமது உடலை பாதுகாக்க உதவுகிறது. இந்த மஞ்சள் பாலை தங்க பால் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post இன்று உலக பால் தினம்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் திறனுடையது: ஹார்மோன் சரியாக சுரக்க உதவுகிறது appeared first on Dinakaran.

Related Stories: