டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்திப்பு!

 

டெல்லி: டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர்
கனிமொழி சந்தித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமைக்கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும். இறுதி வடிவம் பெற்ற கூட்டணி கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்தித்து பேசுகிறார். இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

Related Stories: