கலக்கலாய் ஆடிய சென், ஸ்ரீகாந்த்

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், தைவான் வீரர் வாங் சு வெயை எதிர்கொண்டார். முதல் செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய சென், 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் அந்த செட்டை வசப்படுத்தினார். இருப்பினும் 2வது செட்டில் அட்டகாசமாக ஆடிய வாங், 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.

அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் விறுவிறுப்பாக நடந்தது. அதில் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் சென் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஜப்பான் வீரர் கோகி வடனபே மோதினர்.

முதல் செட்டில் சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த், 21-15 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அடுத்த செட்டில் இருவரும் கடுமையாக போராடியபோதும் இறுதியில் அந்த செட் 23-21 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீரர் வசம் சென்றது. அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டை 24-22 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்ரீகாந்த் போராடி வென்றார். அதனால் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: