ஐசிசி ஓடிஐ தரவரிசை மிட்செல் நம்பர் 1: 2ம் இடத்துக்கு சரிந்த கோஹ்லி

லண்டன்: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில், நியூசிலாந்தின் அதிரடி வீரர் டேரில் மிட்செல் 845 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியுடன் சமீபத்தில் முடிந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 84, 2வது போட்டியில் 131, 3வது போட்டியில் 137 ரன்கள் விளாசினார்.

இந்த அதிரடி ஆட்டத்தால், ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் டேரில் மிட்செல் 845 புள்ளிகளுடன், ஒரு நிலை உயர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்தார். அவர், தரவரிசை பட்டியலில் ஒரு நிலை தாழ்ந்து, 795 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தவிர, ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் ஜாட்ரன் ஒரு நிலை உயர்ந்து 3ம் இடத்தையும், இந்தியாவின் ரோகித் சர்மா ஒரு நிலை தாழ்ந்து 4ம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், இந்திய வீரர் சுப்மன் கில் 5, பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் 6, அயர்லாந்தின் ஹேரி டெக்டார் 7, வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் 8, இலங்கையின் சரித் அசலங்கா 9வது இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர். இந்திய வீரர் கே.எல்.ராகுல் ஒரு நிலை உயர்ந்து 10ம் இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories: