வங்கதேசம் பிடிவாதம்

டாக்கா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டார். அதையடுத்து, டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும், இலங்கைக்கு தங்கள் போட்டிகளை மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. அதை ஐசிசி ஏற்கவில்லை. வங்கதேசம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால், அதற்கு மாற்றாக, உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச அரசின் விளையாட்டு துறை ஆலோசகர் ஆஸிப் நஸ்ருல் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழுத்தத்தால், நியாயமற்ற நிபந்தனைகளை எங்கள் மீது திணித்தால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: