ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களில் ஒன்றாக இணைந்தது GOOGLE GEMINI!

மும்பை: ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களில் ஒன்றாக GOOGLE GEMINI இணைந்தது. ரூ.270 கோடிக்கு 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. WPL ஸ்பான்சர் GEMINI- 4 Al நிறுவனமான CHATGPT உள்ளது குறிப்பிடத்தக்கது.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்காக, கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தளமான ‘ஜெமினி’ (Gemini) உடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ரூ.270 கோடி மதிப்பிலான புதிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், இதன் மூலம் ஐபிஎல் தொடரின் உலகளாவிய அந்தஸ்து மற்றும் ஈர்ப்பை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது. ஏற்கனவே மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கு, ஜெமினியின் போட்டியாளரான ChatGPT ஸ்பான்சராக இருந்து வரும் நிலையில், தற்போது கூகுள் ஜெமினி ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா முன்னரே கூறுகையில், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, கிரிக்கெட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், பிசிசிஐ தனது நிதி ஆதாரங்களை வலுவாகக் கட்டமைத்து வருகிறது. குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டத் தளங்களுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரீம்11 (Dream11) நிறுவனத்திற்குப் பதிலாக அப்பல்லோ டயர்ஸ் ரூ.579 கோடிக்கு ஜெர்சி ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தற்போது டாடா குழுமம் ஐபிஎல் தொடரின் முதன்மை டைட்டில் ஸ்பான்சராகத் தொடரும் வேளையில், ஜெமினி போன்ற புதிய நிறுவனங்களின் வருகை தொடருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: