பிராட்வே பேருந்து நிலையம் ஜன.24 முதல் இடமாற்றம்

 

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல் பேருந்துகள் இயக்கப்படாது என எம்.டி.சி. அறிவித்துள்ளது. பிராட்வேயில் இயக்கப்படும் பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடல் முனையத்தில் இருந்து இயக்கப்படும். 155A, 17E, 17K, 1880, 188ET, 18A, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 21C, 26B, 26G, 26M, 51D, 52B, 54G, 54L, 60A உள்ளிட்ட பேருந்துகள் ராயபுரத்தில் இருந்து இயக்கப்படும்; 6,13,60E, 102, 109, 1020, 102K, 21G, 21E, 21L, 1,4, 44, 330, 38H, 44C, 56K, 57D, 57H, 8B, 557A உள்ளிட்ட வழித்தட பேருந்துகள் தீவுத்திடலில் இருந்து இயக்கப்படும். பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் ஜன.24 முதல் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எம்டிசி விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: