கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கு 24ம் தேதி எழுத்து தேர்வு

சென்னை: மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்கக்கான எழுத்து தேர்வு வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கூட்டுறவு துறை துணை இயக்குநர் ராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 11.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 24ம் தேதி சென்னையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியான www.tncoopsrb.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: