செங்கல்பட்டு: பிரதமர் மோடி வருகையையொட்டி செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் இன்று முதல் 23ம் தேதி வரை, 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, பிரதமர் மோடி வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹீலியம் பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
