அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஒரே நாளில் ரூ.3.62 கோடி வருவாய்: அதிகாரிகள் தகவல்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டியையொட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு 21 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் பொதுமக்களுக்காக இயக்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் மூலமாக பயணிகள் நெரிசலின்றி பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு தரப்பில் செய்யப்பட்டிருந்தன. அதன்படி கடந்த 9ம் தேதி முதல் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 10 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன.

இதில் சொந்த ஊரில் இருந்து மீண்டும் சென்னை மற்றும் பிற இடங்களுக்கு செல்ல ஏதுவாக 18ம் தேதி கூடுதால சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அன்றைய தினம் மட்டும் ரூ.3.62 கோடி வரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இதுவரை இல்லாத புதிய சாதனையாக இவை பார்க்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 7.41 லட்சம் கிலோமீட்டர் தூரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் சொந்த ஊர் அழைத்து செல்ல இரவு, பகல் பாரமால் உழைத்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் இனிப்புகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

Related Stories: