கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!

சென்னை : ரூ. 3000 ரொக்கத்துடன் வழங்கப்படும் பொங்கல் பரிசு, இதுவரை 2 கோடியே 4 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு நாளையும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உணவுப் பொருள் வழங்கல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்புடன், ரொக்கப் பணமாக ரூ.3,000 வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

கடந்த 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வயதானவர்கள், முதியவர்களுக்கு கைரேகை சரிவர விழாததால் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்யலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டவர்களுக்கு நாளையும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் இதுவரை 2 கோடியே 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: