மதுரை: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட யானைகளுக்கான புத்துணர்வு முகாமை மீண்டும் ஏன் துவங்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் யானைகளை பிற யானைகளுடன் பழக வைக்கும் நடைமுறை கொரோனாவுக்கு பிறகு மீண்டும் துவங்கவில்லை என மனு அளிக்கப்பட்டது. தாயை பிரிந்த யானைகுட்டிகளை மீட்டு, முகாமில் பராமரித்து, மீண்டும் காட்டில் விடுவது குறித்து பதில் தரவும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
