உதகை: இது தகவல்களின் காலம்; ஏராளமான தகவல்கள் எளிதில் கிடைக்கின்றன என கூடலூர் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார். மழையில் குழந்தைகளை உட்கார வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தனியார் பள்ளி விழாவில் கிரிஷ் சோடங்கர், திமுக எம்.பி. ஆ.ராசாவும் பங்கேற்றுள்ளனர். தகவல்களை அறிவாக மாற்றும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே பள்ளிகளின் கடமை. தகவல்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டால் இந்த உலகமே மோசமானதாகி விடும். இளம் மாணவர்களை அறிவார்ந்த குடிமக்களாக மாற்றுவதே இதுபோன்ற பள்ளிகளின் கடமை . மக்கள் பரஸ்பரம் அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவதுதான் எனது போராட்டம் என தெரிவித்தார்.
