வர்த்தக உடன்பாடு தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் நாளை பேச்சுவார்த்தை: செர்ஜியோ கோர் தகவல்

வாஷிங்டன்: இரு தரப்பு வர்த்தக உடன்பாடு தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக பொறுப்பேற்றுக் கொண்ட செர்ஜியோ கோர் அறிவித்துள்ளார். வர்த்தக உடன்பாடு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும் செர்ஜியோ கோர் தகவல் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் வர்த்தக பேச்சு தடைபடவில்லை. செமி கண்டக்டர் தயாரிப்பு தொடர்பான பாக்ஸ் சிலிக்கா கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படும். அமெரிக்காவில் அடுத்த மாதம் பாக்ஸ் சிலிக்கா கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: