டி20 உலகக் கோப்பை அயர்லாந்து அணி அறிவிப்பு

டப்ளின்: டி20 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

இந்த தொடருக்கான அயர்லாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பால் ஸ்டீர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மார்க் ஆதிர், பென்கால்ட்ஸ், கேம்பெர், டெலனி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப் ரேஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கர்த்தி, ஹாரி டக்கர், லார்கன் டக்கெட், பென் ஒயிட், கிரேக் யங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: