வேலூர் ஆதி நிச்சயம் ஜொலிப்பார்; வில் யங் நம்பிக்கை

 

மும்பை: இந்தியா-நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது. அந்த அணியின் துவக்க வீரர் நியூசிலாந்து பயிற்சிக்கு பிறகு கூறியதாவது: சொந்த நாட்டிற்காக விளையாடும் போது, அதில் பேரார்வம், உத்வேகம் இரண்டும் எப்போதும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சற்று குறைவாகவே விளையாடி வருகிறோம். இருப்பினும், டி20, டி10 என கிரிக்கெட் உலகம் வேகமாக சுழன்றாலும், அதிலும் 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு வரலாற்று அதிசயமிக்க தொடர்கள் இன்னும் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்கு பழிவாங்கும் எண்ணம் எதுவும் எங்களிடம் இல்லை. அது கடந்த காலம், அதைப்பற்றி இப்போது பேசுவதில் பயனில்லை. ஒருநாள் தொடரை புத்துணர்ச்சியுட விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம். நியூசிலாந்து அணியில் நம்பிக்கைக்குரிய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதைக் காண்பது அருமையாக உள்ளது. இந்த தொடரில் அறிமுகமாகும் வேலூரைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் ஆதித்யா அசோக் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவர் பந்துவீச்சு நுணுக்கங்களை கற்று தேர்ந்துள்ளதால் இந்த தொடரில் அது எங்களுக்கு கை கொடுக்கும். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், நிச்சயம் இந்திய மண்ணில் திறமையை வெளிப்படுத்துவார். ஒருநாள் தொடரில் அசோக் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்’’ என்றார்.

Related Stories: