ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.16,500 ஆக விற்பனை!

 

ஈரோடு: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.16,500 ஆக விற்பனையானது. கடந்த வாரம் ரூ.16,000 ஆக இருந்த மஞ்சள் விலை இன்று ரூ.500 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இரண்டு மாதங்களில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 வரை அதிகரித்துள்ளது. புது மஞ்சள் வரத்து குறைந்த நிலையில், தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: