பாஜ ஆட்டிவைக்கும் பொம்மை அதிமுக: கார்த்தி சிதம்பரம் தாக்கு

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சியில் பங்கு கேட்பது என்பது புதிதல்ல. அனைத்து கட்சியினரும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என நினைப்பதில் தவறொன்றும் இல்லை. இருப்பினும் தற்போது எங்கள் கூட்டணி கட்சிகளின் மனதிலுள்ளது ஒன்று மட்டுமே. அது தேர்தலில் பெரும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே.

இவற்றுக்கு முன்னதாக தொகுதி உடன்பாடு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் என பல்வேறு கட்ட பணிகள் உள்ளன. மாபெரும் வெற்றியினை பெற்ற பின்னரே மற்றவை குறித்து பேச இயலும். அதிமுகவை பொறுத்தளவில் பாஜவுடன் கூட்டணி என்ற பெயரில், தன் சுதந்திரத்தை இழந்து தவித்து வருகிறது. தப்பித்தவறி அதிமுக வெற்றி பெற்றால் கூட, அது பாஜ ஆட்டி வைக்கும் பொம்மையாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: