சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மேலும் தொடர ஓரணியில் நின்று ஒன்றாக வெல்வோம் என்று திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் எட்டுத்திக்கும் மகிழ்ச்சியின் ஓசைகள் ஒலிக்கிறது. திராவிட நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மேலும் தொடர ஓரணியில் நின்று ஒன்றாக வெல்வோம். தொடரட்டும் ஸ்டாலின்! வெல்லட்டும் தமிழ்நாடு! வெல்வோம் ஒன்றாக, உங்க கனவை சொல்லுங்க. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
