மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் உரை

சென்னை: மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைப்பேசி செயலி உருவாக்கம். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் கஜானாவை சுரண்டிய அதிமுக ஆட்சியை மக்கள் விரட்டியடித்தனர். தமிழ்நாட்டின் உரிமைகள் எல்லாவற்றையும் ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. மக்களுக்கு தேவை என்று சொன்னால் உடனே செய்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்’ எனவும் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேசினார்.

Related Stories: