சென்னை: இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அவருடன் அண்ணா சாலை தர்காவின் மூத்த அறங்காவலர்களில் ஒருவரான மன்சூர்தீன், ஷியா-சன்னி ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். பின்னர் தமிமுன் அன்சாரி அளித்த பேட்டி: வலிமையான கூட்டணியாக தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. இந்த நேரத்தில் எதிரிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் எந்த பேச்சுக்கும், காரியங்களுக்கும் நாம் யாரும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தேன். தற்போதைய சூழ்நிலையில் திமுக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக, கூட்டணியில் சலசலப்புகளை தவிர்க்க வேண்டியது அவசியம். திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுகிறது தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி
- திராவிட
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமீன் அன்சாரி
- சென்னை
- மனிதநேயம் ஜன
- இந்தியா
- தமிழ்நாடு காங்கிரஸ்
- செல்வப்பெருந்தகை
- சத்தியமூர்த்தி பவன்
- மன்சுர்தீன்
- அண்ணா
- சாலை தர்கா
