திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை அடையாறு வசந்தா பிரஸ் சாலையில் ரூ.9.62 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறிய எடப்பாடி பழனிசாமி இப்போது போதைப்பொருள் குறித்து பேசுவது விந்தையாக உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது. பான்பராக் போன்ற பொருட்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா தமிழ்நாட்டில் ‘0’ உற்பத்தி (Cultivation) என்ற நிலையில் உள்ளது. எல்லா போதைப்பொருள் குறித்தும் குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள் எங்கு விற்கிறது என்பதை கூறினால் கூறியவர்களின் பெயர்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: