நடப்பு கல்வியாண்டில் புதிய சாதனை 60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: நடப்பு கல்வியாண்டில் சுமார் 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் மாணவர் நலன், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசின் உறுதியான அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது. இதனால், தேவை உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயன்படுத்தி பள்ளிக்கு எளிதாக பயணம் செய்யும் வசதியை, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை உருவாக்கியுள்ளது. அதன்படி கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 2023-24ம் கல்வியாண்டில் 20.06 லட்சம் பேருக்கும், 2024-25ம் ஆண்டில் 25.01 லட்சம் பேர் என 25 சதவீதம் உயர்வு, 2025-26ம் ஆண்டில் 60 லட்சம், பேருக்கு என 140 சதவீதம் உயர்ந்துள்ளது.

Related Stories: