கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹாக்கி மைதானம் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘ஹாக்கி மைதானத்தை வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த விளையாட்டு மைதானத்தின் மூலமாக சர்வதேச, தேசிய அளவிலான சிறப்பு பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
