தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு

நெல்லை, டிச.22: நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணி அன்னைக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர். நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ நன்னாளில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் தாமிரபரணி அன்னைக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூஜைகள் மற்றும் தீபராதனை நடந்தது. திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமையில் சிவனேசசெல்வர்கள் மற்றும் அடியார்கள் முன்னிலையில் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: