அமைச்சர், கலெக்டர் ஆய்வு திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு

திருத்துறைப்பூண்டி, டிச. 22: திருத்துறைப்பூண்டியில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் காலியாக உள்ள 11 வருவாய்த்துறை கிராம உதவியாளர் பணி இடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய விண்ணப்பிக்கலாம் என வருவாய்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 11 பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் 3 இடங்கள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மற்ற 8 பணியிடங்களுக்கு மொத்தம் 626 பேர் விண்ணப்பித்திருந்தனர். அரசு நிர்ணயித்த கல்வி தகுதி மற்றும் வயது வரம்புடைய அனைவருக்கும்எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு முறையாக அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எழுத்து தேர்வு நடைபெற்றது, இந்த தேர்வில் 469 பேர் மட்டுமே கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 157 பேர் கலந்து கொள்ளவில்லை. தேர்வர்கள் 10:15 மணி வரை உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் காலதாமதமாக தேர்வுக்கு10:30 மணிக்கு வந்த இருவர் திருப்பி அனுப்பப்பட்டனர். கல்வி தகுதி 10 வகுப்பு தேர்வு எழுதி இருக்க வேண்டும். ஆனால் தேர்வு எழுதியவர்களில் பட்டாதாரிகள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2026 ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி இரண்டு நாள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: