திருவாரூர் மேரா யுவ பாரத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம்

திருவாரூர், டிச. 22: திருவாரூர் மாவட்ட மேரா யுவ பாரத் சார்பில் நடைபெற்ற இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை ஆர்டிஒ சத்யா வழங்கினார். இந்திய அரசு இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் திருவாரூர் மேரா யுவ பாரத் மற்றும் ஹார்ட் புல்நெஸ் இன்ஸ்டிட்யூட் இணைந்து இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் திருவாரூர் அருகே விளமலில் நடைபெற்றது. இம்முகாமின் தொடக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சாவித்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாவட்ட மேரா யுவ பாரத் துணை இயக்குநர் திருநீலகண்டர் முன்னிலை வகித்தார். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவர் நந்தகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இம்முகாமில் மாணவ, மாணவிகளுக்கு தலைமைத்துவம் பற்றிய பயிற்சி வகுப்புகள் பயிற்றுநர்கள் மூலமாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் ஆர்டிஒ சத்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ஹார்ட் புல்நெஸ் இன்ஸ்டிட்யூட் தாலுகா ஒருங்கிணைப்பாளர் அலமேலு மங்கை உட்பட பலர் கலந்தகொண்டனர். முடிவில் மேரா யுவ பாரத் மாவட்ட திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: