மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள்

மன்னார்குடி, டிச. 18: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்ரூ ரூ. 16 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளைஅமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். தென்னகத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் புகழப்படும் இக்கோயிலுக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் முயற்சியால் வரும் ஜனவரி 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு ரூ.16 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் பந்தக்கால் நடப்பட்டு, கோயிலின் ஈசானிய மூலையில் சுமார் 3,500 சதுரடி பரப்பளவில் பிரமாண்டாமான யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிவக்குமார், மனோகரன், லதா வெங்கடேசன் மற்றும் தீட்சிதர்கள் உடனிருந்தனர்.

Related Stories: