377 தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன்

திருச்செங்கோடு, டிச. 18: திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகளிலும் உள்ள தெருநாய்கள் பொதுமக்களை கடிப்பதால், ரேபிஸ் வைரஸ்கள் பரவி, மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்கும் வகையில், திருச்செங்கோடு நகராட்சியில் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து, ரேபிஸ் தடுப்பூசி போடப்படும் பணிகள் நடந்து வருகிறது. திருச்செங்கோடு நகர்மன்ற உறுப்பினர்கள், தொடர்ந்து மன்ற கூட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து போர்க்கால அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உத்தரவின் பேரில், நகராட்சி கமிஷனர் வாசுதேவன், நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 377 தெருநாய்களுக்கு அரசு விதிமுறைகளின் படி பிடிக்கப்பட்டு, அவற்றை கருத்தடை ஆபரேஷன் செய்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு பிடித்த இடங்களிலேயே அவை விடப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி நகர் நல அலுவலர் மணிவேல், துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சிவா, செல்வராஜ் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் நகராட்சியில் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: